ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் யாக்கப் மகன் தயான் வயது 38 இவர் கடந்த ஒன்னாம் தேதி தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்க சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார் அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த தயான் திடீரென கடலில் தவறி விழுந்து கடலுக்குள் மூழ்கினார் இந்த நிலையில் தயானின் உடலை மீட்க சக மீனவர்கள் போராடியும் உடலை மீட்க முடியவில்லை இது தொடர்பாக அவரது உறவினர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். ஆனாலும் மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த உடல் தஞ்சை மாவட்டம் கொள்ளு காடு கடல் பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் கொள்ளுக்காடு பகுதி மீனவர்களை தொடர்பு கொண்டு இறந்த மீனவரின் உறவினர்கள் உடலை மீட்டு தர கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து கொள்ளுக்காடு அந்தோனியார் புரம் பகுதி மீனவ இளைஞர்கள் 5 படங்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதை தவிர்த்து தீவிரமாக மீனவரின் உடலை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளுக்காடு கரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இறந்த மீனவர் தயானின் உடல் மிதப்பதை கண்டு அந்த உடலை மீட்டு கரை சேர்த்தனர் இது பற்றி கொள்ளு காடு பகுதி மீனவர்கள் கூறுகையில் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்தால் அவர்களது உடலை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மீனவர்கள் ஆகிய நாங்களே போராடி அந்த உடலை மீட்க வேண்டியிருக்கிறது இதே போல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கி இறந்த இரண்டு மீனவர்களின் உடலை நாங்களே தேடி மீட்டுக் கொண்டு வந்தோம். இந்நிலையில் தற்போது மீனவர் தயானின் உடலையும் நாங்கள் தான் மீட்டோம் எனவே மீனவ இளைஞர்களுக்கு மீன்வளத் துறையில் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
