தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். “பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டு சேர்த்தவர். சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த மேடைக் கலைவாணரான அவரது நாற்காலியை யாராலும் நிரப்ப முடியாது” எனக் குறிப்பிட்டுள்ள வைரமுத்து, அவரது குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
