பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவை அடுத்து, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, ஊடகம் ஒன்றிற்கு அளித்த இரங்கல் பேட்டியின்போது கதறி அழுதார். மேலும், “ஒன்றுக்கும் உதவாத கிராமத்துப் பையனாக இருந்த எனக்குள் இலக்கிய ஆர்வத்தை உண்டாக்கி, தன்னம்பிக்கை தந்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் ஐயாதான். எங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்தி நெறிப்படுத்திய அவரை இழந்துவிட்டேன்” எனத் துயரம் தாளாமல் கண்ணீர் மல்க அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
