Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மேகாலயா முதல்வர் சங்மா

முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ. சங்மாவின் மகனும் தற்போதைய மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா, கடந்த  7ம் தேதி மேகாலயா மாநிலத்தில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.   இவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். மீண்டும் ஆட்சி அமைந்தால் வேளாங்கண்ணி பேராலயம் வந்து மாதாவை தரிசிப்பதாக வேண்டியிருந்தாராம்.

அதன்படி வேண்டுதலை நிறைவேற்ற இன்று காலை மனைவி, தாயார், சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினரோடு   விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் வேளாங்கண்ணி சென்று ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் அவர் கார் மூலம்  திருச்சி வந்தார்.  திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு அருந்தினார். மாலை 3 மணிக்கு பின்னர் அவர்  திருச்சியில் இருந்து அவர் விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!