திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் நேற்று கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடா்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் சமது மகன் பரூக் (32), ஆட்டோ மெக்கானிக். இவருடைய தாய் கஜப்னிஸா. இவா் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது பரூக் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தில்லை நகா் போலீசார் பரூக்கின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பரூக்குக்கும், அவருடைய சகோதரா் அஸாரூதீன் (28) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், பரூக் வீட்டில், அவருடன் அசாருதீன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தில்லை நகா் போலீசார் சந்தேகத்தின்பேரில் அசாருதீனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
