Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர் ரேஷன் கடைகளில் புழு, வண்டு அரிசி விநியோகம்

திருவள்ளூர் ரேஷன் கடைகளில் புழு, வண்டு அரிசி விநியோகம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவைகளான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை ஏழை, எளிய மக்கள் உணவுக்காக வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், அரிசி தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலை ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் வண்டுகள், புழுக்கள் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘’ இங்குள் நியாய விலைக் கடைகளில் தரமான அரிசியை வெளியே விற்று விடுகின்றனர். வண்டும், தரமற்ற அரிசியை, ஏழை, எளிய மக்களுக்கு வழங்குகின்றனர்’ என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டால், ‘’எங்களுக்கு வருவது இந்த அரிசி தான்’’ என்றும் அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!