Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வட்டி விகித உயர்வால் மக்கள் சுமை கூடும்: காங்கிரஸ் விமர்சனம்

வட்டி விகித உயர்வால் மக்கள் சுமை கூடும்: காங்கிரஸ் விமர்சனம்

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக உயர்த்தியுள்ளதை தொடர்ந்து, நடுத்தர மக்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ‘பணவீக்க மனிதர்’ மோடியின் ஆட்சியால் பொதுமக்கள் செலுத்தும் வீடு, வாகன கடன்களுக்கான EMI கடன் திருப்பி செலுத்தும் காலமும் உயரும் என ‘X’ தளத்தில் காங்கிரஸ் பதிவிட்டுள்ளது. மேலும், ‘நல்ல நாட்கள் வரும்’ என கூறி வாக்குறுதி அளித்த பாஜக, தற்போது மக்களை கசக்கி பிழியும் ஆட்சியை நடத்தி வருவதாகவும் அக்கட்சி சாடியுள்ளது.

error: Content is protected !!