திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை சோலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளையரசு இவருடைய மகன் கவின் (11) அதே பகுதியில் உள்ள யுனிவர்சல் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பது வழக்கம் மேலும் இவருக்கு ஏதாவது எக்ஸ்பிரிமெண்ட் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் தெரிகிறது.
அதனை தொடர்ந்து இன்று பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங் நடைபெற இருந்த நிலையில் அதற்காக பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்த கவின் அப்போது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க

வைக்கப்பட்டிருந்த டின்னர் வைத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து youtube ஐ பார்த்து எக்ஸ்பிரிமெண்ட் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக டின்னர் கவினின் துணியில் பட்டதால் திடீரென தீப்பிடித்து தகதகவென எறிய தொடங்கியது.
கவினின் அலறல் சத்தம் கேட்க பெற்றோர்கள் வீட்டின் மாடியில் சென்று பார்த்தபோது உடல்

முழுவதும் எறிந்து கொண்டிருந்தார் இதனை சற்றும் எதிர்பார்க்காத தந்தை இளையரசு மகனை கட்டி தழுவி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார் உடனடியாக கவிதை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் கவின் 80 சதவீதம் தீக்காயக்கங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேடம் மகனைக் காப்பாற்றிய தந்தையும் தீ காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
youtube பார்த்து எக்ஸ்பிரிமெண்ட் செய்த பள்ளி மாணவன் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
