Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேதாரண்யம் பகுதிகளில் மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம் பகுதிகளில் மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், காலை 8 மணி அளவில் அகஸ்தியன்பள்ளி, பூப்பட்டி, நெய்விளக்கு, தோப்புத்துறை, சேத்தாக்குடி உள்ளிட்ட வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

error: Content is protected !!