சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த விஜயா (55) என்பவரை காணவில்லை என அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பாழடைந்த அறைக்குள் இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர், அங்கிருந்த துவாரம் வழியே கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்து 4 நாட்களுக்கு பிறகு கீழ் தளத்தில் உள்ள அந்த அறையிலிருந்து அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெண் அழுகிய நிலையில் மீட்பு
