ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து 300 பயணிகளுடன் இன்று (அக்.14) புதுடெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் திடீரென பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. விமானத்தை கடத்துவதற்கான அபாயத்தை குறிக்கும் ‘7500’ என்ற சிக்னல் அகமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரால் தீவீர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சியா? அவசரமாக தரையிறக்கம்
