பருவ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்துவதாகவும், மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை தவெக அரசு முடக்குவதாகவும் கூறி திமுக சார்பில் சென்னையில் இன்று (அக்., 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில், திருச்சி சிவா எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேகர்பாபு தலைமையில் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்
