Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் வெளுத்து வாங்கிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று இரவு நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய

கனமழை வெளுத்து வாங்கியது.

கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை செய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கனமழையால் கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

error: Content is protected !!