Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 வயது சிறுமியை ஏமாற்றியதாக தவெக நிர்வாகி மீது புகார்!

திருமண ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை ஏமாற்றிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி

திருமணம் செய்து கொள்ள 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு டிமாண்ட்

ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கண்ணீருடன் வந்த சிறுமியின்

தாய்

சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவரது உறவுக்காரரான மாமன் முறை கொண்ட

தியாகு என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட 15 வயது சிறுமியை புகைப்படம் எடுப்பதாக கூறி சில தினங்களுக்கு முன்பு தியாகு பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்

உறவுக்காரர் தானே என சிறுமியின் தாயார் உடன் சென்றநிலையில் உணவு வாங்குவதற்காக சிறுமியின் தாயார் வெளியே சென்ற போது அங்கு தியாகு சிறுமியிடம் பாலியல் அத்துமீறில் ஈடுபட்டதாக தெரிகிறது

சென்னை திரும்பிய சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் கூடவே தியாகுமிடம் கேட்டதற்கு நானே திருமணம் செய்து கொள்கிறேன் என 15 வயது சிறுமிடமும் சிறுமியின் பெற்றோரிடமும் கூறியுள்ளார்

முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறேன் என உறுதி அளித்த தியாகு 15 லட்சம் பணம் கேட்பதாகவும் பணத்தைக் கொடுக்க முடியாவிடில் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் சிறுமியின் தாயிடம் கூறியதாக தெரிகிறது

இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பை தொடர்பு கொண்டு ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று தியாகு கூறியதை தொடர்ந்து சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் அந்த புகாரை திரும்ப பெற்றுள்ளனர்

ஆனால் தற்போது திருமண நிச்சய ஏற்பாடுகள் எல்லாம் வேண்டாம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 25 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக தர வேண்டும் இல்லையென்றால் திருமணம் நடக்காது என தியாகம் கூறியதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளார்

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தியாகுவை நேரடியாகவும் செல்போன் வாயிலாகவும் அழைத்தும் ஏற்கவும் நேரடியாக சந்திக்கவும் மறுத்து உள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தற்போது ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

தொடர்ந்து தங்களுக்கு காவல்துறையின் தமிழக முதல்வரும் ஒரு தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்

ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஏமாற்றிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

இந்த தியாகு காசிமேடு 50 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாக உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!