புத்தூரில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தின கண்ணன். இவரது மனைவி 49 வயது பெண். இவர்கள் ஒரு மகன் உள்ளார். இவர்களுக்கு நாமக்கலில் ஒரு விவசாய நிலம் உள்ளது.அந்த நிலத்தை வாரத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 15 -ம் தேதி ரத்தின கண்ணன் நாமக்கலுக்கு சென்ற நிலையில் அவரது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ரத்தின கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (47). மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த அவர்கள் அவரை மீட்டு சிகிச்சை க்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.. வேறு சம்பவங்களில் 2 பேர் கைது
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு நிஜாமுதீனிலிருந்து மதுரைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5-ல் வந்து நின்றது. அப்போது உணவுத்துறை அதிகாரி அன்புச் செல்வன், ரயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரயிலில் ஏறி சோதனை செய்தார். அப்போது ரயிலில் பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 31.315 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அன்புச்செல்வன் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் அரியமங்கலம் மலையப்பா நகர் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 71) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் காந்தி மார்க்கெட் வெல்ல மண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக வரகனேரி பகுதியை சேர்ந்த நிஜாம் 48 என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெருப்பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் வயது 67. இவர் கடந்த 14ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் அதிகாலை 2 மணியளவில் பார்த்தபோது இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். அவர் தீயை அணைக்க முயன்ற போதிலும் இரு சக்கர வாகனம் முழுவதாக எரிந்து நாசமானது. இது குறித்து அவர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு
திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் வயது 30. நிலையில் இவர் தனது சக்கர வாகனத்தை வீட்டில் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச் தெரிய வந்தது. இது குறித்து அவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நிஜாம் 48 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் லோடுமேன் மீது தாக்குதல்
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 43) இவர் டாஸ்மாக் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு லோடு இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விஜய் 28, அஜித்குமார் 30 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
