திருச்சி, ஸ்ரீரங்கம் (110 / 11 K.V) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 17.10.2026 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை நடை பெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களுக்கு 18ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜநகர் பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர் , சுப்ரமணிய நகர் புதியது, வீ .என் .நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டி புத்தூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் E.B.காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, M.K.கோட்டை செக்ஸன் ஆபீஸ், M.K.கோட்டை நாகம்மை வீதி, M.K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், LIC புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனுர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே கே நகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி ஆவின்யூ, தேவி பள்ளி மேலூர், பெரியார் நகர், T.V.கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் 18 ம் தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
