திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47) இவர் பிஎஸ்சி மற்றும் எம்பிஏ விவசாயம் தொடர்பாக படித்துவிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அவருக்கு முகநூலில் வர்த்தகம் தொடர்பான ஒரு குறுஞ்செய்தி வந்தது.அதில்
எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை நம்பி ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணத்தை ஆன்லைனில் வெங்கடேசன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு செலுத்தினார். பிறகு அந்த பணத்தை அவரால் மீண்டும் எடுக்க முடியவில்லைமேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்புகொண்டபோது முடியவில்லை இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த வெங்கடேசன் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை ஏமாற்றிய மர்ம ஆசாமி யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
