ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், வீரர் சிவராஜன் சோலைமலை கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார். இளம் பாரா விளையாட்டு வீரர்களுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை
