Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்

சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. 

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த கட்டுமானத் தொழில் செய்து வரும் அருண்ராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  அரசு காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறியதால், ரூ.1.25 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 9 லாரிகளை வாங்க வைத்து அவற்றை மணல், ஜல்லிக் கற்கள் கொள்ளைக்கு பயன்படுத்தியதாகவும்  15 முறைக்கும் மேல் சென்று பணத்தை திருப்பிக் கேட்டபோது சிவசங்கரின் உதவியாளர் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

error: Content is protected !!