Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டைக் கடித்தவர் பலி!

ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டைக் கடித்தவர் பலி!

ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த நபர் வெடிகுண்டு வாயில் வெடித்து உயிரிழப்பு.

மத்திய பிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில், ரசகுல்லா இனிப்பு என நினைத்து நாட்டு வெடிகுண்டை வாயில் வைத்து கடித்த 35 வயது ராஜெந்திர பரோட்டியா நபர் உயிரிழந்தார்.

இரவு உணவை முடித்த ராஜேந்திரா, தனது வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.

இரவு 8 மணியளவில் அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராமபகத் பரோட்டியா என்பவர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் சிறிய ரக நாட்டு வெடிகுண்டை (Pig-killer bomb) “ரசகுல்லா” என்று கூறி ராமபகத் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருட்டில் அதை இனிப்பு என நம்பிய ராஜேந்திரா வாயில் போட்டுக் கடித்தவுடன், வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ராஜேந்திராவை குடும்பத்தினர் ஆட்டோ மூலம் டிண்டோரி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்…

error: Content is protected !!