Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பிரபல யூடியூபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் மீது சென்னை பரங்கிமலை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில், தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியதாகக் கூறி அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் தவெக ஆதரவாளர் என சாட்டை துரைமுருகன் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீனாட்சிக்கும் தவெகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!