Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாசு கழிவுகளை குவித்து தீ வைத்த சிறுவன் படுகாயம்

சென்னை, எழும்பூர் ரயில்வே காவலர் குடியிருப்பில் கீழே கிடந்த பட்டாசுகள், மத்தாப்புகளை குவித்து வைத்து தீ வைத்த சிறுவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் ரயில்வே காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன். இவர் திருவான்மியூர் ரயில்வே காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் கவின் (8), தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். காவலர் குடியிருப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசுகள் மற்றும் மத்தாப்பு கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருந்துள்ளது.  இதை கவின் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் வெடிக்காத பட்டாசுகளில் உள்ள மருந்துகளை மற்றும் மத்தாப்புகள், புஸ்வாணங்களில் உள்ள மருந்துகளை ஒரு இடத்தில் ஒன்றாக குவித்து நண்பர்களுடன் சேர்ந்து தீவைத்துள்ளார். அப்போது குபீரென மருந்து தீப்பிடித்ததால், கவினின் கால், முகம் என பல இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.

அதை பார்த்த அவரது பெற்றோர் உடனே கவினை மீட்டு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link