Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்கூட்டி மீது கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… 2 மாணவர்கள் காயம்

கரூர் அருகே பொய்கைபுத்தூரில் ஸ்கூட்டி மீது சொகுசு கார் மோதி விபத்தில் இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. காயம் அடைந்த இரண்டு மாணவர்கள்
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதி. காரில் வந்த நான்கு பேர் லேசான காயம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் 16, மணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் 16. இவர்கள் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2, மற்றும் +1 வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளி முடிந்ததும் பொய்கைபுத்தூர் செல்வதற்காக நண்பர் ஒருவரின் ஸ்கூட்டி ஒன்றினை வாங்கிக்கொண்டு பிரதாப், மாதேஷ், மற்றும் +1 வகுப்பு படிக்கும் பிரதாப் தம்பி முத்து 16, ஸ்ரீதர் 16 ஆகிய 4 பேரும் சென்றுள்ளனர்.

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி கம்மநல்லூர் ஊராட்சி பொய்கைப்புதூர் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது எதிரே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் அதிவேகமாக ஸ்கூட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஸ்கூட்டியில் பயணம் செய்த மாதேஷ், பிரதாப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த முத்து, ஸ்ரீதர் ஆகிய இருவரும் ஆகிய கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் விபத்துக்குள்ளான சொகுசு தலைக்குப்புற கவிந்ததில் காரில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் இறந்த இரண்டு மாணவர்களின் உடலையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து என்ற இளைஞர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த முத்து இறந்த பிரதீப்பின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link