திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மல்லியம்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் (21), அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெங்களூருவில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர், 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதில் சிறுமி கர்ப்பமானதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 6 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த உதயகுமாரை பெங்களூருவில் கைது செய்தனர்.
14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த ராணுவ வீரர் கைது
