Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி பாமக போராட்டம்!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம்.

தமிழக அரசு நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை – சம்பா பாதிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு 40,000 நிவாரண வழங்க வேண்டும், காய்ந்து வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின், உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தலைவர் ஆலயமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!
Secret Link