இளைய புரட்சி தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெ.தீபா எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இரும்பு பெண்மணி’ என்ற அடைமொழி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கே உரியது என்றும், அதை சினிமா பிரபலம் என்ற வகையில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் வேதனை அடைந்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
த்ரிஷா பேரவை மீது சட்ட நடவடிக்கை: ஜெ.தீபா எச்சரிக்கை
