Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாக்கடையில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட நோட்டுக்கட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு அள்ளி சென்றார்கள். இது குறித்து அப்பகுதிமக்கள்.. காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டன. உடனடியாக இந்த தகவல் பொது மக்களுக்கு தெரியவர கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு சென்று பணத்தை அள்ள துவங்கினர்.. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையாது என்பது தெரியவந்துள்ளது.  அவற்றை வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!