Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக முதல்வருக்கு சிங்கப்பூரில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை  சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அங்கு  தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டில் தொழில்  முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுக்கிறார்.  இதற்காக நாளை  மாலை 7மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகமும் பங்கேற்கிறார். இது தொடர்பான  அழைப்பிதழ் சிங்கப்பூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த அழைப்பிதழில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் ஆகியோரின்  உருவப்படங்கள்  இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!