Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை தொடர்வதால்  கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர்  உள்ளிட்ட  11  மாவட்டங்களில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!