Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சப்தரீஸ்வரர் கோயிலில் அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா…

சப்தரீஸ்வரர் கோயில், திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயிலில்
7  ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை எனவும் 7 முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு அமிஷேகம் சுவாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடைபெறும். இந்நிலையில் ஆடிப்பூர தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 14 ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.ஆடிப்பூர தேரோட்ட விழாவின் 3 ம் நாள் அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!