Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

படிக்கிற வயதில் காதல் செய்யக்கூடாது… நடிகர் சதீஷ் குட்டி அட்வைஸ்…

நாமக்கல் அடுத்துள்ள எர்ணாபுரத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் சதிஷ் கலந்து கொண்டார். அப்போது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் சதிஷ் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

பின்னர் பேசிய நகைச்சுவை நடிகர் சதிஷ், மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம், தனக்கு தற்போது வரை எவ்வித மது மற்றும் புகைப்பழக்கம் இல்லை, நேற்று ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதையே தான் கூறினார், மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையானால் மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடும், படிக்கின்ற வயதில் காதல் செய்வது மிக பெரிய தவறு, காதலித்தால் நேரம் தான் வீணாகும், நன்றாக படித்தால் அனைத்துமே உங்களை வந்தடையும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!