Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். இந்த நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி, அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார்.  உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் , பெல்லி தம்பதியை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான  கேரள மாநிலம் வயநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!