Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், டவுன் டிஎஸ்.பி., ராஜா மேற்பார்வையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நசீர் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டன். தொடர்ந்து 26 நபர்களுக்கு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பு செல்போன்கள் உரிய நபரிடம் தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது,

இதில் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், ஏட்டு அப்துல்லா, சைபர் கிரைம் குற்றவியல் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் பிரகதீஸ்வரன் துரிதமாக செயல்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து திருட்டு போன செல்போன்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!