Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில்  அவர் மீண்டும் பாஜவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் ஜெகதீஷ் ஷெட்டருக்கு போன் செய்து 10 நிமிடம் பேசியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. அந்த பேச்சுவார்த்தையில் ஜெகதீஷ் ஷெட்டரை மீண்டும் பாஜவில் சேர அமித்ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து பாஜ மாநில முன்னாள் தலைவர் சி.டி.ரவியிடம் கேட்டதற்கு  ஜெகதீஷ் ஷெட்டரின் டி.என்.ஏ காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவுடன் பொருந்தாது. அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோர் ஜன சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இருந்திருக்கின்றனர். ஷெட்டர் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவரது டி.என்.ஏ காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவுடன் பொருந்தி போகாது என்பதால் அவரால் அங்கு நீடிக்க முடியாது என்று சி.டி.ரவி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!