Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் மனைவி  இன்று காலை திருச்சி  வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்றார்.   அங்கு  பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட அனைத்து  சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.  பின்னர் பேட்டரி காரில் ஏறி கோயிலை சுற்றிப்பாா்த்தார்.  கோயிலில் உள்ள கடைகளுக்கு சென்று  மங்கல பொருட்களை லதா ரஜினி வாங்கினார்.

லதா கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள் கோயிலில் பெருமளவு திரண்டனர். இதனால்  கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  லதாவுக்கு ரெங்கநாத சுவாமி வெண்கல சிலையை கார்த்தி,ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்.  கோயில் பட்டார்களும் லதாவுக்கு நினைவு பரிசு வழங்கினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!