Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை  திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன .

இவற்றை செப்டம்பர் 20ம் தேதி, மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச் செயலாளர் வைகோ குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து கடிதம் கொடுத்திருந்தார்.

நேற்று குடியரசுத் தலைவர் முர்மு செயலகத்தின் துணைச் செயலாளர்,  இது தொடர்பாக மதிமுக  பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!