Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி  தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

82 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பணிகள் திருப்தியாக இல்லை .அந்த மாவட்டங்களில் பணிகளை தீவிரப்படுத்த  வேண்டும்.

டிசம்பர் 2 வது வாரத்திற்குப் பிறகு மாவட்டவாரியாக சுற்றுப்பயணம், ஜனவரியில்  மக்களவை தேர்தல் பரப்புரையை தொடங்க  திட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீதான புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம். பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்போம்.

தேர்தலின் போதே லேடியா? மோடியா? என ஜெயலலிதா கூறினார், அதே போன்று மக்கள் மத்தியில் நம் கருத்துக்களை ஆணித்தரமாக  முன்வைக்க வேண்டும்.

பெரிய கட்சிகள்  இன்னும் நம் கூட்டணிக்கு வரவில்லை என நிர்வாகிகள் தெரிவித்ததற்கு, நான் பார்த்துக்கொள்கிறேன் என கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!