Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த சிறுமியிடம்  பெற்றோர் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன  சிறுமியின் பெற்றோர்  மங்களமேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து  புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோவின்  கீழ் வழக்குப் பதிவு செய்த  மங்களமேடு போலீசார் பெரியசாமியை கைது செய்து  விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!