Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செல்வன் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி செல்லும் கனரக லாரிகள் அதிவேகமாக செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!