Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

திமுக கூட்டணியில் உள்ள  கட்சிகளுக்கு  ெதாகுதிகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம்  அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.  அந்த தொகுதி எது என்பது பின்னர் முடிவாகும். திமுக கூட்டணியில் ஏற்கனவே முஸ்லிம் லீக், கொமதேக,  2 கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!