இந்தியாவின் ஏவுகணை நாயகர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 95வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அப்துல் கலாம் போல் வேடம் அணிந்து பேரணி .
குழந்தைகளின் இந்தப் பேரணியை திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் அழகேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் .

இந்தியாவின் ஏவுகணை நாயகர் என மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அழைக்கப்படுகிறார்.
குழந்தைகள் மீதும் ,
மாணவ மாணவியர்கள் மீதும் அளவு கடந்த அன்பு காட்டிய அப்துல் கலாமின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தனியார் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்துல் கலாம் போல் உடை அணிந்து இன்று அப்துல் கலாம் பிறந்தநாள் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களும் ஒரே மாதிரி உடை அணிந்தும் சிகை அலங்காரத்துடன் அப்துல் கலாம் போல் காட்சியளித்தனர் .
சிறுவர் சிறுமிகளின் அப்துல் கலாம் பேரணியை திருநாகேஸ்வரம் கடை வீதியில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர் .
