நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சட்ட விழிப்புணர்வு பதிவுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது மாநில அளவிலான டிஜிட்டல் ஒழுக்க குழுக்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
