Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், புரன்குமார் நேற்று இரவு தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், புரன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலிருந்து குமாரின் மொபைல் போன்கள் மற்றும் பிற ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!