Skip to content

அமராவதி கிளை வாய்க்காலில் கழிவு நீர் கலக்கும் அவலம்… தூர்வார கோரிக்கை..

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அமராவதி கிளை வாய்க்கால் ஒத்தம துறையிலிருந்து ராஜபுரம் வரை விவசாய பாசனத்திற்காக அமராவதி கிளை வாய்க்காலில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில்,

தற்போது கூடலூர் கீழ்பாகம் பகுதியில் உள்ள பாலத்தின் நடுவே இருபுறமும் கழிவுநீர் செல்வதால் அமராவதி கிளை வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாமல் மேலும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் அவல நிலை உள்ளது.

மேலும் இந்த பகுதியில் செல்லும் அமராவதி கிளை வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் செல்லும் சாக்கடைகளை சரி

செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் சட்டவிரோதமான செயல்களை நடைபெறுவதால் இப்பகுதியில் மது பிரியர்கள் மது அருந்தி பாட்டில்களை வாய்க்காலுக்குள் வீசுவதால் பாதுகாப்பு இல்லாத ஒரு அச்ச நிலை உள்ளது.

மேலும் அமராவதி கிளை வாய்க்காலை தூர்வாரி அமராவதி கிளை வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!