உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்த நிலையில், இன்று (ஆக.26) முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 2 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சட்டசபையில் அவர் பேசியபோது ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
