Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: அதிகாரிகளை கண்டித்த ஆட்சியர் – 23 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் மற்றும் விவசாயத் தொழில் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன்

தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பாசன வசதி குறைபாடுகள், நீர்வள மேலாண்மை சிக்கல்கள், மின் இணைப்பு பிரச்சினைகள், விவசாயக் கடன்கள், உரம் மற்றும் விதை விநியோகம், பயிர் காப்பீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அப்போது அதிகாரிகள் விளக்கம் அளித்த நிலையில், “விளக்கம் மட்டும் போதாது; விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளை ஆட்சியர் கண்டித்தார் உடனடி தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 23 டாஸ்மாக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மாற்று இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

error: Content is protected !!