Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்-300 வங்கி கிளைகள் மூடல்

திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்-300 வங்கி கிளைகள் மூடல்

வாரத்துக்கு 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது, மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை, இரண்டு சனிக்கிழமை வேலை என இருக்கிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும்.
புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தப்படி வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
கிளைகளில் உள்ள அதிகாரிகள் ஊழியர்கள் முழுமையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை முடங்கியது பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வங்கிகளை மேலாளர்கள் முதல் ஊழியர்கள் வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டு கிடந்தன. திருச்சி ஸ்டேட் பேங்கி மண்டல அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!