Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு, இனிகோ இருதயராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!