Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே முதியவர் சடலம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே முதியவர் சடலம்

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் செசன்ஸ் போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!