Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சின்னியம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தின் காரணமாக கோவை – அவினாசி நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து பயணிகளுடன் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, கோவை மாநகரின் நுழைவாயில் பகுதியான சின்னியம்பாளையம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. நிலைதடுமாறிய அந்தப் பேருந்து, நடுச்சாலையிலேயே பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்களும், சக வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறிய பயணிகள் அனைவரும் கண்ணாடிகளை உடைத்து அவசரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் மூவருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!